பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் !

காட்பாடியில் உள்ள சன்பீம் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது.

Update: 2024-03-23 06:41 GMT

காட்பாடியில் உள்ள சன்பீம் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் காட்பாடி சன்பீம் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைவர் டி.ஹரிகோபாலன் தலைமை தாங்கி பேசுகையில், நாம் அனைவரும் சன்பீமியன் என கூறுவதில் பெருமை பட வேண்டும் என்றார். பள்ளித்தாளாளர் தங்கபிரகாஷ், முதல்வர் ரத்தீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவன் ஆதில் சுகுமார் வரவேற்றார். மாணவி நித்யஸ்ரீ கல்வியாண்டின் ஆண்டு அறிக்கை வாசித்தார். துணைத்தலைவர் டாக்டர். ஜார்ஜ் அரவிந்த் தொடக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர், கவுரவ விருந்தினர் ஆகியோரை துணைத் தலைவர் டாக்டர் ஜோன்ஆர்த்தி அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

சிறப்பு விருந்தினராக திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 400 மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது மாணவர்களாகிய நீங்கள் உங்களின் வெற்றிக்காக கடின உழைப்பை கொடுக்க வேண்டும். தைரியம், தொலைநோக்கு பார்வை, பயமின்மை, எதையும் செய்ய முடியும் என்ற தைரியம் வேண்டும் என்றார்.விழாவில் கவரவ விருந்தினராக குழந்தைகள் நல டாக்டர் டி.அருளாளன் கலந்து கொண்டு பேசுகையில், சன்பீம் பள்ளியால் இந்தப் பகுதி முழுவதும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதுபோல் உங்களால் உங்களை சுற்றி உள்ளவர்களும் மேம்பட வேண்டும். மாணவர்கள் தனித் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சன்பீம் பள்ளியால் வேலூருக்கே பெருமை என்றார்.

இல்லத்து போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியனான நேதாஜி, கல்வியில் நேரு ஹவுஸ் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.விழாவில் சன்பீம் பள்ளிகளின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News