பிள்ளையார் குளம் மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு

பிள்ளையார் குளம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வைத்த அறிவிப்பு பலகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-04-06 11:31 GMT
பிள்ளையார் குளம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வைத்த அறிவிப்பு பலகையால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பிள்ளையார் குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஶ்ரீபுரத்தில் 150 வீடுகளில் 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை, குடிநீர், தெருவிளக்கு, கழிவு நீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப் பகுதி மக்கள் சார்பில் கடந்த 5 வருடங்களாக காத்திருக்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய துணை இயக்குனர், சட்டப்பேரவை உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு பொது மக்கள் சார்பில் தொடர்ந்து மனு அனுப்பப் பட்டுள்ளது. ஆனால் இது குறித்து இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து கடந்த பிப்ரவரி 6ம் தேதி பொது மக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் 1 மாதத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் உறுதி அளித்தபடி இது வரை அடிப்படை வசதிகளுக்கான பணிகள் தொடங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி வரும் பராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக பொது மக்கள் சார்பில், ஊர் எல்லையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு குறித்து இது வரை அதிகாரிகள் தரப்பில் இருந்து யாரும் பேச்சு வார்த்தைக்கு வராத நிலையில், புதிய தமிழகம் கட்சியினர் நேரில் சென்று அப் பகுதி மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News