அரசுபள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
குருக்கலாம்பாளையம் அரசுப்பள்ளியில் ஆண்டுவிழா கோலாலமாக நடந்தது.;
ஆண்டுவிழாவில் கலந்து கொண்டவர்கள்
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட, குருக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவிற்கு, பள்ளி மேலாண்மைகுழு தலைவர் நிர்மலா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
முன்னாள் ஆசிரியர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வேல்முருகன் ஆண்டறிக்கை வாசித்தார். பட்டதாரி ஆசிரியை ஜெயா வரவேற்புரையாற்றினார். பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் மாணவர்களின் திரைப்பட பாடலுக்கு ஆடல், பாடல் பாடுதல், திருக்குறல் ஒப்புவித்தல், நாடகம் நடித்தல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்சிகள் நடந்தது.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு டவுன் பஞ்.,துணைத்தலைவர் மனோரஞ்சிதம் பாராட்டி பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். ஓய்வுபெற்ற ஆசிரியர் தங்கவேலு வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.