கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் 30ம் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவில் கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளர் இளங்கோ வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கோவையை சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் 'கொங்கு தமிழினி' சாந்தாமணி பங்கேற்று, மாணவர்கள் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பேணிக்காப்பதோடு பெற்றோர்களை மதித்து நடப்பதே சமுதாயத்திற்கு செய்யும் சேவை என பேசினார்.
தொடர்ந்து, கல்வி, கலை, தனித்திறன்கள் என பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பேராசிரியர், பேராசிரியைகள், பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் வாசுதேவன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஒருங்கிணைப்பாளர் முனைவர் குமரகுரு நன்றி கூறினார்.