எருமப்பட்டி அருகே ஆண்டு விழா
எருமபட்டி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது;
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டி பட்டிஅரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது இவ் விழாக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குமரேசன் தலைமை ஏற்று ஆண்டு அறிக்கை வாசித்தார் பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் துளசிராமன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரிதா பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் தீபலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது முடிவில் பத்தாம் வகுப்பு 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பின்னர் பள்ளியில் 100% விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முதுகலை தமிழாசிரியர் பிரபாகரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் முடிவில் முதுகலை உயிரியில் ஆசிரியர் குமார் நன்றி உரையாற்றினார் மற்றும் இதில் துணைத் தலைவர் சுரேஷ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்