அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா

ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.

Update: 2024-03-15 14:07 GMT

ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கணிதவியல் விரிவுரையாளர் சுமதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் பொறுப்பு விஜயன் தலைமை வகித்து, 2023-24 ம் கல்வி ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார். அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் தயாளன் மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், புத்தகங்கள் வாசித்தல் திறனை மேம்படுத்துதல் மற்றும் வேலை வாய்ப்பு பெறும் அணுகுமுறையை பற்றி எடுத்துரைத்தார். கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 220 மாணவர்களுக்கு பணிநியமன ஆணைவழங்கப்பட்டது.

வாரியத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது. விழாவில் துறைத்தலைவர்கள் செல்வராஜ், கோபிநாத், செந்தில்நாதன், எழிலரசு, மணிகண்டன், ரவிச்சந்திரன், ஏழுமலை, ஆசிரியர்கள் தொழில் நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலபணித்திட்ட அலுவலர் தியாகராஜன் செய்திருந்தார். இறுதியாக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News