மேல்மலையனூரில் சத்துணவு ஊழியர் சங்க ஆண்டு விழா

மேல்மலையனூரில் சத்துணவு ஊழியர் சங்க ஆண்டு விழா நடந்தது.

Update: 2024-05-23 06:12 GMT

மேல்மலையனூரில் சத்துணவு ஊழியர் சங்க ஆண்டு விழா நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத் தில் நடைபெற்றது. விழாவுக்கு ஒன்றிய தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயலட்சுமி வரவேற்றார். மாவட்ட தலைவர் ஜெயந்தி சங்க கொடியேற்றினார்.

இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேல்மலையனூர் வட்டக் கிளை பொருளாளர் வேல்முருகன், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியதாரர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் பூங்காவனம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அத்துக்கூலி முறையில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள், பல்வேறு திட்டங்களில் பணி புரிகின்ற மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் மேல்மலையனூர் ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்க துணை தலைவர் இந்திரா காஞ்சனா, இணை செயலாளர் சீதா, நிர்வாகி பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.முடிவில் ஒன்றிய பொருளாளர் சுமதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News