செல்போன் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது!

முக்காணியில் செல்போன் பறித்த வழக்கில் மூன்று மாதத்துக்குப்பின் மேலும் ஒரு இளைஞரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-06-20 09:10 GMT
செல்போன் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது!

பைல் படம் 

  • whatsapp icon
தூத்துக்குடி மாவட்டம், முக்காணி குருவித்துறை தேவா் தெருவைச் சோ்ந்த வெள்ளச்சாமி மகன் மாரிமுத்து (49).இவா் கடந்த மாா்ச் மாதம் பழையகாயல் பிரதான சாலையில் உள்ள டீக்கடை அருகில் செல்போனில் பேசிக் கொண்டு நடந்து வந்தபோது, அவ்வழியே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் செல்போனை பறித்துக் கொண்டு சென்றனர். இது தொடா்பாக மாரிமுத்து அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த அசோக்குமாரை(28) கைது செய்தனர். மேலும் மற்றொரு நபரை தேடி வந்த நிலையில், விருதுநகா் மாவட்டம் இனாம் ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த சதாசிவம் மகன் மகேஷ்ராஜனை(23) விருதுநகரில் வைத்து நேற்று கைது செய்தனர்.
Tags:    

Similar News