மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-06 14:42 GMT
மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகர் பlகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.. இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் தினம்தோறும் பத்திரப்பதிவு மற்றும் திருமண பதிவு நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் இருந்து அதிகப்படியாக லஞ்சப் பணம் பெறுவதாக எழுந்த புகாரின் பேரில் ஆறுக்கு மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையானது மேற்கொண்டு வருகின்றனர்.