போதை ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி
கன்னியாகுமரியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் மக்கள் தலைவர் ஜீவா நினைவு நாளை முன்னிட்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.;
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் மக்கள் தலைவர் ஜீவா நினைவு நாளை முன்னிட்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி மற்றும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கன்னியாகுமரியில் தொடங்கிய பிரச்சார இயக்கத்துக்கு குமரி மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சஜேஷ் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் வி. கிருஷ்ண குமார் முன்னிலை வகித்தார்.
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை ஏ.ஐ.டி.யு.சி.யின் மாநில செயலாளர் எம். இராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.பேரணியை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தா.சுபாஷ் சந்திர போஸ், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலத்தலைவர் எஸ்.கே.கங்கா, அனைத்திந்திய முற்போக்கு பேரவையின் மாநில துணைத் தலைவர் பேராசிரியர் சுந்தரம், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் குமரி மாவட்ட செயலாளர் செல்வராணி, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பேரணி குமரி மாவட்டத்தின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணா விளையாட்டரங்கம் முன் உள்ள ஜீவா சிலையை வந்தடைந்தது. நிறைவு நிகழ்ச்சியில் எஸ்.அனில்குமார் தலைமை தாங்கினார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் க.பாரதி நிறைவுரையாற்றினார். ஏராளமான இளைஞர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.