சங்ககிரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-26 16:33 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் வருவாய் கோட்டாட்சியர் பங்கேற்பு சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் கள்ளச்சாராயம் குடிப்பதால் உடனடியாக மரணத்தை ஏற்படுத்தும், கண்பார்வை உடனடியாக இழக்க நேரிடும், நிரந்தர உடல் ஊனத்தை ஏற்படுத்தும், உடல் நலம் பாதிக்கும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியபடி பழைய எடப்பாடி சாலை பேருந்து நிலையம் கோட்டை வீதி உள்ளிட்ட சங்ககிரி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின்போது மாணவர்கள் போதைக்கு எதிரான கோசங்கள் எழுப்பியபடியே வந்தனர்.

Tags:    

Similar News