போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருவள்ளூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-06-26 05:32 GMT

பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர் மற்றும் எஸ்பி 

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உதவி ஆட்சியர் ஆயுஷ் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.
Tags:    

Similar News