புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு !!

புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

Update: 2024-06-01 08:25 GMT

துண்டு பிரசுரங்கள்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் பிரதாப் குமார் வழிகாட்டுதலின் பேரில் புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் உலகப் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலரின் நேர்முக உதவியாளர் இளங்கோவன் தலைமையில் பொதுமக்கள் பயணிகளிடம் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இந்நிகழ்வின்போது புகையிலை கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் டாக்டர் வனிதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் மற்றும் எளம்பலூர் ரோவர் பொரியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News