உவரி,  திருச்செந்தூருக்கு விடிய விடிய சிறப்பு பஸ்கள்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு உவரி மற்றும் திருச்செந்தூருக்கு விடிய விடிய சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Update: 2024-05-22 03:25 GMT

சிறப்பு பேருந்துகள் (பைல் படம்)

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான வைகாசி விசாகம் இன்று 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.' முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ள குமரியிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். 

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கும், குமரிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வாரகள். இந்த நிலையில் நேற்று மதியத்தில் இருந்து நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர், உவரி பஸ்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நேற்று இரவில் இருந்து உவரி, திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செந்தூருக்கு வள்ளியூர் வழியாக 20 பஸ்களும், உவரிக்கு 30 பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன. கூட்டத்தை பொறுத்து இன்றும்  நாளையும்  கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News