மக்களைத் தேடி மருத்துவம் ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு 

தஞ்சாவூரில் மக்களைத் தேடி மருத்துவம் ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தினர்.

Update: 2024-06-25 13:40 GMT

ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில், தஞ்சையில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடைபெற்றது.  தஞ்சை மாவட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில், ஊக்கத் தொகையை மாதம் முதல் வாரத்தில் வழங்கிட வேண்டும். நிலுவையில் உள்ள ஏப்ரல், மே மாத ஊக்கத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்" என வலியுறுத்தி சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் கோரிக்கை மனு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சாய்சித்ரா தலைமையில் கொடுக்கப்பட்டது. 

இதில், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, சங்க மாவட்டத் தலைவர் வள்ளி, பொருளாளர் தமிழ் இலக்கியா, நிர்வாகிகள் செல்வராணி, ஆனந்தி, சுதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்களைத் தேடி  மருத்துவ ஊழியர்கள் பங்கேற்றனர்.  கோரிக்கை மனுவைப் பெற்று கொண்ட சுகாதார துறை இணை இயக்குநர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

Similar News