ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து தாசில்தாரிடம் முறையீடு

பழனிவாழ் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், ஏழை மக்களின் நலன் கருதி தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பழனி கோட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-03-03 04:04 GMT

தாசில்தாரிடம் மனு 

பழனியில் உயர் நீதிமன்ற உத்தரவின் படி அடிவாரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி திருக்கோவில் நிர்வாகம் செய்யும் காரியங்களால் பழனிவாழ் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், ஏழை மக்களின் நலன் கருதி தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பழனி கோட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி பழனி நகராட்சி, வருவாய் துறை மற்றும் பழனி கோவில் தேவஸ்தான நிர்வாகம் ஆகியவை இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டது. இதன்படி விவாதம் பகுதிகள் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. கிரிவலப் பாதையில் வாகனங்கள் செல்லாதபடி, இணைப்புச் சாலைகளை அடைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News