திண்டுக்கல் மாவட்டத்தில் கடைகல் இயக்கும் பயிற்சி பெற விண்ணப்பம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடைகல் இயக்கும் பயிற்சி பெற விண்ணக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-18 12:48 GMT

மாவட்ட ஆட்சியர் 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்கள் உள்நாட்டு தொழிற்சாலைகள் மற்றும் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பணிபுரிந்திட NTTF இன்ஸ்டிடியூட் வாயிலாக கடைக்கல் இயக்கும் பயிற்சியானது வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட உள்ளது.

இப்பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பு முடித்த 18 முதல் 24 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான காலம் 6 மாதம் 15 நாட்கள் ஆகும். தங்கி பயில வசதி ஏற்படுத்தி தரப்படும்.

மேலும் இப்பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ வழங்கும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News