சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
கள்ளக்குறிச்சி எஸ்.பி.,க்கு நீதிமன்றம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள சட்ட ஆலோசகர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி எஸ்.பி.,க்கு நீதிமன்றம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தகுதி வாய்ந்த பல்கலைக்கழகம் மூலம் பி.எல்., அல்லது அதற்கு நிகரான சட்டம் தொடர்புடைய பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உயர்நீதி மன்றம் அல்லது நீதிமன்றம் குறித்த பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். எந்த ஒரு வழக்கும் நிலுவையில் இருக்கக்கூடாது.
தகுதியுள்ள நபர்கள் ஜனவரி 19ம் தேதிக்குள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். சட்ட ஆலோசகராக தேர்வு செய்யப்படும் நபருக்கு ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பணியில் திருப்தி இல்லையென்றால் எஸ்.பி., வாயிலாக ஒப்பந்தம் ரத்து செய்து வேறுநபர் எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டம் பயின்றவர்கள், எஸ்.பி., அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். பின், உரிய சான்றுகளை இணைத்து, சட்ட ஆலோசகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கள்ளக்குறிச்சி 606 213 என்ற முகவரிக்கு ஜனவரி 19ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.