அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அரூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் பிரிவுகளுக்கு ஜூன் 7 தேதி வரை இணையதளம் மூலமாக மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்தார்.

Update: 2024-05-29 08:59 GMT

அரூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் பிரிவுகளுக்கு வரும் 7 தேதி வரை இணையதளம் மூலமாக மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்தார்.


தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பாடப்பிரிவுகளில் நடப்பு 2024-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு 14 வயது முதல் 40 வயது வரை ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வயர்மேன் 2 ஆண்டு படிப்பில் சேரலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிட்டர், ரெப்ரிஜிரேஷன் ஏர் கண்டிஷன் டெக்னீசியன் ஆகிய 2 ஆண்டு படிப்புகளுக்கும், ஆட்டோ பாடி மெக்கானிக் 1 ஆண்டு படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம்.

தொழில்பிரிவு படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான மற்ற விவரங்களை இணையதளத் ஏற்றியதில் தெரிந்து கொள்ளலாம்.இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யும்போது மதிப்பெண் சான்றிதழ்கள் ஆதார் அட்டை, செல்போன் எண் உள் ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 மட்டும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். அரூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் மாதம் 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News