அக்னிவீர் வாயு ஏர்மேன், ஆட்சேர்ப்பு பேரணிக்கு விண்ணப்பிக்கலாம்

அக்னிவீர் வாயு ஏர்மேன், ஆட்சேர்ப்பு பேரணிக்கு விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-27 17:25 GMT

மாவட்ட ஆட்சியர் 

2024-ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் வாயு ஏர்மேன் 2025, தேர்வு சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள 8-வது ஏர்மேன் தேர்வு மையத்தின் மூலம் இந்திய இராணுவத்தால் ஜூலை எட்டாம் தேதி முதல் ஜூலை 28 வரை ஆட்சேர்ப்பு பேரணி நடைபெற்று, பின்னர் அக்டோபர் 18ஆம் தேதி அன்று இணையதளம் வாயிலாக தேர்வு நடைபெற உள்ளது.

திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவர்கள். கல்வித்தகுதி மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இது ஒரு மத்திய அரசுப்பணி.

மேலும் அனைத்து விவரங்கள் அறிய ஜூலை 8ம் தேதி முதல் ஜூலை 28ஆம் தேதி வரை வரை www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தை அணுகவும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் அதிக அளவில் அக்னிவீர் வாயு ஏர்மேன் ஆட்சேர்ப்பு பேரணிக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News