சிறந்த நிறுவனங்களுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் கோ.லட்சுமிபதி !
முதலமைச்சரின் சிறந்த நிறுவனங்களுக்கான விருது பெற தகுதியான நபர்களின் கருத்துரு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் சிறந்த நிறுவனங்களுக்கான விருது பெற தகுதியான நபர்களின் கருத்துரு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். ஆண்டு தோறும் சுதந்திர தின விழாவின் போது அரசு அலுவலகங்களில் புதிய வகையான உத்திகளை கையாண்டு, வெற்றி பெற்று நல்லாட்சியின் நீடித்த, தரமான வளர்ச்சி மேம்படுத்திய அலுவலர்கள், அமைப்புகள், நிறுவனங்களுக்கு முதலமைச்சரின் சிறந்த நிறுவனங்களுக்கான விருது வழங்கப்படவுள்ளதால் 2024 ஆம் ஆண்டிற்கு தகுதியான நபர்களின் கருத்துரு பெறுவதற்கு தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தகுதியான நபர்களின் கருத்துருகள் 14.07.2024 க்குள் கீழ்கண்ட விதிமுறைகளின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும். தனியரின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான சாதனைகள் தொடர்பாக ஒரு பக்க அளவில் இருத்தல் வேண்டும் (தமிழில் மருதம் மற்றும் ஆங்கிலத்தில் VERDANA மேற்கண்ட சாதனை புரிந்தவர்களுக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தாங்கள் புரிந்த சாதனைகளை கீழ்கண்டவாறு புத்தக வடிவ கருத்துரு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 2 நகல்கள் தயார் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
பொருளடக்கம் (ம) பக்க எண் (Index), இவ்விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் சுய விவரம் (Bio data) மற்றும் Passport Size Photo -2 தனியரின் சாதனைகள் தொடர்பாக ஒரு பக்க அளவில் இருத்தல் வேண்டும் (தமிழில் மருதம் மற்றும் ஆங்கிலத்தில் VERDANA) 14.07.2024 அன்று மாலை ஐந்து மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628101 என்ற அலுவலக முகவரியில் உடனடியாக சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.