தேவாலய புனரமைத்தல் பணிக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேவாலய புனரமைத்தல் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-23 10:22 GMT

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாட்டில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வரும் தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு 10-15 வருட வயதுள்ள கட்டிடத்திற்கு ரூ.2 லட்சமாக வழங்கப்பட்டு வரும் மானியம் ரூ.10 லட்சமாகவும், 15-20 வருட கட்டிடத்திற்கு ரூ.4 லட்சமாக வழங்கப்பட்டு வந்த மானியம் ரூ.15 லட்சமாகவும், 20 வருடத்திற்கு மேலுள்ள கட்டிடத்திற்கு ரூ.6 லட்சமாக வழங்கப்பட்டு வந்த மானியம் ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தேவாலயங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும். நிதியுதவி 2 தவணைகளாக மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். எனவே, பயன்பெற விரும்புவோர் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News