மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் ஜெயசீலன்
2023-2024- ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புரப்பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு ரூ.3.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மணிமேகலை விருது பெறுவதற்கு சமுதாய அமைப்புகளை தேர்வு செய்வதற்கான தகுதிகள் வெளியிடப்பட்டு இருப்பதாகவும் மேலும் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் சமுதாய அமைப்புகளை கூட்டம் தொடர்ந்து முறையாக நடத்தப்பட்;டிருக்க வேண்டும் சேமிப்புத் தொகையினை பயனுள்ளதாக பயன்படுத்திருக்க வேண்டும். வங்கிக்கடன் பெற்றிருக்க வேண்டும் குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைந்திருக்க வேண்டும்.திறன் வளர்ப்பு மற்றும் வாழ்;வாதார பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்..
சமூக நல நடவடிக்கைகளில் பங்கெடுத்திருக்க வேண்டும். அதன்படி, விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புரப்பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு 2023-24-ம் நிதி ஆண்டிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி தகுதியுடைய சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.