ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் வளர்மதி

அரக்கோணம் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-28 04:39 GMT

ஆட்சியர் வளர்மதி 

ராணிப்பேட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரக்கோணம் ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆங்கிலம், வரலாறு மற்றும் கணக்கு பாடப்பிரிவுகளுக்கும், அரக்கோணம் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை விலங்கியல் பாடப்பிரிவிற்கும், காரை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பள்ளி மேலாண்மைகுழு மூலம் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்கள் ஆகியோர் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும் 7-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News