பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் மண்டல குழுக்கள் நியமனம் !

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் மண்டல குழுக்கள் நியமனம்.;

Update: 2024-02-23 06:29 GMT
பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் மண்டல குழுக்கள் நியமனம் !
 மாவட்ட ஆட்சியர் தேர்தல் மண்டல குழுக்கள் நியமனம்
  • whatsapp icon
விருதுநகர் லோக்சபா தேர்தலுக்காக 191 மண்டல குழுக்களை நியமித்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார். 2024 லோக்சபா தேர்தலுக்காக ஓட்டுச்சாவடிகளில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பெற்று ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை செய்யும் மண்டல குழுக்கள் நேற்று நியமிக்கப்பட்டது. ராஜபாளையம் 31, ஸ்ரீவில்லிபுத்துார் 29, சாத்துார் 24, சிவகாசி 24, விருதுநகர் 28, அருப்புக்கோட்டை 26, திருச்சுழி 29 என 191 மண்டல குழுக்களை நியமித்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார். இக்குழுக்களில் 754 பேர் அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விரைவில் துணை கலெக்டர் நிலையில் உதவி தேர்தல் அலுவலர்கள், நியமிக்கப்பட உள்ளனர்.
Tags:    

Similar News