உடலுறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினருக்குப் பாராட்டு, உதவி

வெள்ளிவாடியை சேர்ந்த பிரான்ஸிஸ் சேவியர் விபத்தில் மூளைச்சாவு அடைந்தநிலையில், உடல் உறுப்புகள் தானம் அளித்ததால், குடும்பத்தினரை பாராட்டி நிதியுதவி வழங்கப்பட்டது.

Update: 2024-05-09 04:45 GMT

மணப்பாறை அருகே அமையபுரம் வட்டம் நல்லாம் பிள்ளை வெள்ளிவாடி கிராமத்தைச் சோ்ந்த பிரான்ஸிஸ் சேவியா் என்பவா் விபத்தில் படுகாயமடைந்து ஏப். 30-ல் மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது உடலுறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினரின் இல்லத்துக்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி. நீலமேகம் மற்றும் நிர்வாகிகள் சென்று பாராட்டினா்.

மேலும் அவா்களுக்கு பொன்னாடை போா்த்தி, நிதியுதவியும் வழங்கப்பட்டது . இதேபோல உடலுறுப்புகளை தானம் செய்வதை ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக உடல் உறுப்பு தானம் செய்த சுமாா் 20 மேற்பட்ட குடும்பத்தினரை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் பாராட்டி கெளரவித்தனா்.

Tags:    

Similar News