சிவகங்கையில் முன்னாள் எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா
சிவகங்கையில் முன்னாள் எம்எல்ஏவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது;
முன்னாள் எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகரில் காங்கிரஸ் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரனின் 85 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் அவர் 70 ஆண்டுகால பொது வாழ்வு பணி ஆகியவற்றை பாராட்டி, போற்றும் வகையில் சிவகங்கை நகர் நேதாஜி சதுக்கத்தில்,
உள்ள சண்முகராஜா கலையரங்கில் அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டி கௌரவிக்கும் விழா மூத்த வழக்கறிஞர் மோகனசுந்தரம் தலைமையில், நகர மன்ற தலைவர் துரை ஆனந்த், பச்சேரி சுந்தரராஜன்ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்,
முன்னாள் மத்திய அமைச்சர்கள் பசிதம்பரம், இ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்