10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
சித்தாமூரில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட புத்திரன்கோட்டை உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு புத்திரன் கோட்டை ஊராட்சி சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
புத்திரன்கோட்டை ஊராட்சி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த ரோஷினி 489,லோகிஷா 457, பவஸ்ரீ 433,என்ற மூன்று மாணவிகள் சிறந்த மதிப்பெண் எடுத்ததற்காக மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஒன்று மற்றும் இரண்டு மூன்று என பரிசுகள்வழங்க வேண்டுமென புத்திரன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நிர்மல்குமார் தலைமையில் பள்ளி மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு தெரிவித்து கல்வி ஊக்கத்தொகை வழங்கி மாணவிகளை பாராட்டினார்.
முன்னதாக அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவில் எம்.சீனிவாசன் கே.பி.எம்.குடும்பத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். இந்நிகழ்வில் புத்திரன்கோட்டை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு செல்வராஜ், மற்றும் உதவி தலைமை ஆசிரியர் விஜயகுமார், கிராம மக்களிடையே சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் மாணவர் சங்கம் தலைவர் டி.தீர்த்தமலை, செயலாளர் செல்வகண்ணு, கல்வி மேலாண்மை குழு தலைவர் சுதா அருள்தாஸ், துணைத் தலைவர் செல்வம், மற்றும் கிராம தலைவர் மு.மோகன்ராஜ், முன்னாள் மாணவர் சங்க துணை தலைவர் ஜெ.குமணன், மின்சாரத் துறை அதிகாரி என்.முருகன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பி.கே.கண்ணன், ஏ.செல்வராஜ்,எம்.எத்திராஜ், ஜி.செல்லதுரை,உட்பட கிராம பொதுமக்கள் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்..