மழை வெள்ளத்தில் உதவியவர்களுக்கு பாராட்டு விழா

செய்துங்கநல்லூரில் மழை வெள்ளத்தில் உதவியவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது;

Update: 2024-02-25 12:20 GMT
மழை வெள்ளத்தில் உதவியவர்களுக்கு பாராட்டு விழா

மழை வெள்ளத்தில் உதவியவர்களுக்கு பாராட்டு விழா

  • whatsapp icon
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சேனையர் சமுதாய மண்படத்தில் மழை வெள்ளத்தில் மக்களுக்கு உதவிய செய்துங்கநல்லூர் சுற்றுப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவகுமார் தலைமை வகித்து அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இன்ஸ்பெக்டர் பத்பநாப பிள்ளை, துணை தாசில்தார் அய்யனார், சப் இன்ஸ்பெக்டர் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். வெள்ளத்தில் உதவிய வகைக்கு இரயில் வே கொடுத்த பணத்தினை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய தாதன்குளம் மக்கள், செய்துங்கநல்லூரில் மீட்பு பணியில் ஈடுபட்ட இளைஞர்கள், ஆறாம்பண்ணை, கால்வாய் ,படுகையூர் , வல்லநாடு, வசவப்பபுரம், ஸ்ரீவை பெரும்பத்து உள்பட பல்வேறு பகுதியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், விவசாய சங்க தலைவர் குமார். ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல் காதர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஸ்ரீவைகுண்டம் நதிக்கரை சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சந்துரு நன்றி கூறினார். உற்சாக மாக பணியாற்றிய இளைஞர்களை ஊக்குவிப்பதன் மூலமாக தொடர்ந்து இவர்களது பணி மிகவும் செம்மைப்படும். அதோடு மட்டுமல்லாமல் உயிரை துச்சமாக மதித்து படகு மூலம் சென்று பல உயிரை காப்பாற்றிய மீனவர்கள் உள்பட பலரை தாசில்தார் பாராட்டி பேசினார்.
Tags:    

Similar News