கீழே கிடந்த மொபைல் போனை போலீசில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு
குமாரபாளையத்தில் கீழே கிடந்த மொபைல் போனை போலீசில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவரை அனைவரும் பாராட்டினர்.;
Update: 2024-03-04 06:10 GMT
அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருபவர் ஜெய்வந்த், 14. இவர் நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் பட்டத்தரசியம்மன் கோவில் அருகே வந்த போது, மொபைல் போன் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதனை அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கேட்ட இவர், குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தார். இந்த போனின் மதிப்பு சுமார் 20 ஆயிரம் என கூறப்படுகிறது. போனை ஒப்படைத்த மாணவரை இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசார், பள்ளியின் ஆசிரிய பெருமக்கள், நகர முக்கிய பிரமுகர்கள் பாராட்டினார்கள்.