அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-22 15:15 GMT
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

2024-ஆம் ஆண்டில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவ / மாணவிகளுக்கு உதவிடும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர்/அருப்புக்கோட்டை/சாத்தூர்/திருச்சுழி மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சூலக்கரை, விருதுநகர்-3 ஆகிய இடங்களில் சேர்க்கை உதவி மையங்கள் செயல்படுகின்றன. எட்டாம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் ரூ.50/- யை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / G-Pay வாயிலாகவும் செலுத்தலாம்.

விண்ணப்பம் செய்ய கடைசி நாள்.07.06.2024. பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக்கருவிகள், காலணி, பஸ் பாஸ் வழங்கப்படும். மேலும் மாதாந்திர உதவித் தொகை ரூ.750/- மேலும் அரசு பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும், பயிற்சி முடித்தபின், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.

இது தொடர்பாக, மேலும் விவரங்கள் பெற்றிட, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் -04562- 252655- 294382 முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அருப்புக்கோட்டை -04566-225800 முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சாத்தூர்-04562-290953 முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருச்சுழி-95788-55154, 70100 -40810 உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விருதுநகர் -04562-294755 ஆகிய தொலைபேசி எண்களில்; தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News