நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் திறனறிவுத் தேர்வு !!!

நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் JCI நடத்திய திறனறிவுத் தேர்வு நடைபெற்றது.

Update: 2024-09-12 12:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் JCI நடத்திய திறனறிவுத் தேர்வு நடைபெற்றது. நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில், நாமக்கல் JCIநடத்திய திறனறிவுத் தேர்வு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான  இன்று நடைபெற்றது. JCI என்ற தன்னார்வ அமைப்பானது இந்த தேர்வை உலகம் முழுவதும் நடத்திவருகின்றது. இந்திய அளவில் நடைபெறும் இந்த தேர்வை 16 மண்டலங்களாக பிரித்து நடத்துகின்றது. அதில் ஒன்பது, மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். நவோதயாப் பள்ளியில் இருந்து 70 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு இந்த திறனறிவுத் தேர்வை எழுதினார்கள்.

இந்த தேர்வில் இந்திய அளவில் முதல்இடத்தை பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், இரண்டாம் இடத்தை பிடிக்கும் மாணவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், மூன்றாம் இடத்தை பிடிக்கும் மாணவர்களுக்கு முப்பதாயிரம் ரூபாயும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு பள்ளியில் மாணவர்களுக்கு சூழ்நிலையில் மாற்றம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி இன்று மாலை இரண்டு மணியளவில் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமிற்கு பள்ளியின் பொருளாளர் தேனருவி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.

அவர் பேசுகையில், பள்ளி மாணவ, மாணவிகள் நமது பூமியில் ஏற்படும் சூழ்நிலை மாற்றத்தை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு ஒவ்வொரு தனி மனிதனும் மரக்கன்றுகளை நடுதல், அதனை இறுதிவரை பாதுகாத்து வளர்த்தல், நெகிழிப் பைகளைப் பயன்படுத்தாமை, முடிந்த அளவு மோட்டார் வாகனத்தை பயன்படுத்தாமல் வாழும் வாழ்க்கையை கடைபிடித்தல், இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறையை கடைபிடிக்க வேண்டும். இதுவே நாம் வாழும் இந்த பூமிக்கும் நமது அடுத்த தலைமுறைக்கும் நாம் அளிக்கும் பாதுகாப்பாகும் என்று குறிப்பிட்டார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாமக்கல்  JCIசெனட்டர்  N.கார்த்திக் தலைவர் அவர்களும், JCIசெனட்டர் S.பிரவின் அவர்களும்,JCI இயக்குநர்  சிவராமகிருஷ்ணன் அவர்களும் JFD. C.R கிருத்திகா JCSAT ஒருங்கிணைப்பாளர் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பூமியில் ஏற்படும் பருவகால மாற்றம் எல்நினோ மாற்றம் அதனால் பூமியில் ஏற்படும பேராபத்துகள் குறித்தும் விரிவாக விளக்கமளித்தனர். நிறைவாக பள்ளி முதல்வர் ஆண்டனி ராஜ் அவர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கும் நாமக்கல் JCI அமைப்பினருக்கும் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.



Tags:    

Similar News