அரக்கோணம்: பாம்பு கடித்து சிறுவன் பலி!
அரக்கோணம் பகுதியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-06-24 11:57 GMT

அரக்கோணத்தை அடுத்த நந்தி வேடந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் கிரன் (13). திருத்தணி கசவராஜபேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி இரவு வீட்டுத் திண்ணையில் தூங்கி கொண்டிருந்த கிரனை பாம்பு கடித்தது.
இதனால் கிரன் அலறி துடித்தான். அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் சென்று சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கிரன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.