ஆராம்பண்ணை கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
ஆராம்பண்ணை கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் மழை வெள்ளத்தில் சேதமான தாமிரபரணி நதிக்கரையோர பகுதியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் சிறிய மழை பெய்தாலே ஆற்று நீர் ஊருக்குள் புகும் அபாயம் இருப்பதால் உடனடியாக சேதமடைந்த கரைகளை சீரமைக்க கோரி ஆராம்பண்ணை கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர்,
ஆட்சியர் அலுவலகம் முற்றுகை தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 தேதிகளில் பெய்த கனமழை மற்றும் தாமரபரணி ஆற்றுப்படுகையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த மழை வெள்ளம் மற்றும் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆறாம் பண்ணை கிராமம், அரபாத் நகர் , அன்பு நகர் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பு நீங்கி ஒரு மாத காலமாகியும் தாமிரபரணி நதிக்கரையோர உடைப்பு ஏற்பட்ட கரைப்பகுதிகளை சீரமைக்க பொதுப்பணித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியை எந்த அதிகாரிகளையும் வந்து பார்க்கவில்லை இதன் காரணமாக சிறிய மழை மற்றும் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டால் மீண்டும் ஊருக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றங்கரையோர பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமியர்களின் இறுதி சடங்கு செய்யும் பகுதியும் மழை நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே இந்த மழை வெள்ளத்தில் உடைந்த இந்த கரை பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆறாம் பண்ணை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.