பழனியில் பட்டியலில் பெயா் விடுபட்டதாக வேட்பாளரிடம் வாக்குவாதம்

பழனியில் திமுகவினா் வாக்கு சேகரிக்க சென்ற போது அங்கு வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்களுக்கும், அவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2024-04-15 10:31 GMT
வேட்பாளரிடம் வாக்கு வாதத்தில் பொதுமக்கள்

பழனி பள்ளிவாசல் 23-ஆவது வாா்டு அசாஸ் ராவுத்தா் சந்து பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாக்காளா் பட்டியல் திருத்தத்தின் போது 30-க்கும் மேற்பட்டோா் பெயா்கள் விடுபட்டுப் போனது. இதில் பலரும் திமுகவைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவா்கள் தங்கள் பெயரை பட்டியலில் மீண்டும் சோ்க்க வேண்டும் எனக் கூறி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

தற்போது திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக. கூட்டணியில் மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக சச்சிதானந்தம் போட்டியிடுகிறாா். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 23-ஆவது வாா்டு உறுப்பினரும், நகா்மன்றத் தலைவருமான உமாமகேஸ்வரி தலைமையில் திரளான திமுகவினா்

அசாஸ் ராவுத்தா் சந்து பகுதியில் வாக்கு சேகரித்த போது அங்கு வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்ட பெண் வாக்காளா்கள் தாங்கள் வாக்களிக்க முடியாத நிலைக்கு தீா்வு காண வேண்டும் எனக் கோரி நகா்மன்ற தலைவா் உமாமகேஸ்வரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Tags:    

Similar News