அரியலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

செந்துறை வழக்கறிஞர் தாக்கபட்டதை கண்டித்து, அரியலூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர்.

Update: 2024-04-23 14:34 GMT

நீதிமன்ற புறகணிப்பில் ஈடுபட்ட வக்கீல்கள்

அரியலூர் வழக்கறிஞர் சங்க ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க துணை தலைவர் கதிரவன் செயலாளர் முத்துக்குமரன் பொருளாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர் முன்னிலையில் வைத்தனர்.

கூட்டத்தில் செந்துறை வழக்கறிஞர் சங்க உறுப்பினர் ராச. பிரபாகரன் சமுக விரோதிகளால் தாக்கபட்டதை கண்டித்து, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், செந்துறை வழக்கறிஞர் சங்க வேண்டுகோளை ஏற்று நமது அரியலூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கம் 23.04.2024 ந் தேதி ஒருநாள் மட்டும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை அடுத்து அருகில் உள்ள மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம், மாவட்ட குடும்பநல நீதிமன்றம், மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்,

குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 1, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். ii ஆகிய 12 நீதிமன்றங்கள் வழக்காடு வழக்கறிஞர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News