சிவன்மலையில் பக்தர்கள் அடிப்படை வசதி ஏற்பாடு

சிவன்மலையில் பக்தர்கள் அடிப்படை வசதி ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது

Update: 2024-06-07 09:50 GMT

சிவன்மலையில் பக்தர்கள் அடிப்படை வசதி ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்து சிவன்மலை என்ற பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் சிவபெருமான் பார்வதியின் இளைய மகன் என்று சொல்லக்கூடிய முருகன் இக்கோவில் சுப்பிரமணிய சுவாமியாக வள்ளி தெய்வானையுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவில் மிக முக்கிய சிறப்பு இக்கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டி. இதில் பக்தர்களின் கனவில் வரும் பொருட்களை, இப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுவது வழக்கம்.

இதில் வைக்கப்படும் பொருட்கள் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஐதீகம். மேலும் இக்கோவில் சூரசம்ஹாரம் நிகழ்வு மற்றும் தைப்பூசத் தேர் திருவிழாக்கள் மிகச் சிறப்பு. இந்த திருவிழாக்களில் தமிழகம், வெளிமாநில மற்றும் வெளிநாட்டில் இருந்தும் கூட பக்தர்கள் வந்து கலந்து கொண்டு வழிபட்டு செல்வர். சுமார் 15 நாட்களுக்கு மேல் நடைபெறும் இந்த திருவிழாக்களில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி மலையில் இருந்து கீழிறங்கி வந்து பக்தர்களுக்கு அருள் தரும் நிகழ்வு நடைபெறும். 

பக்தர்களுக்கு கூடுதல் வசதி:  இக்கோவில் அறநிலைத்துறை கட்டுபாட்டில் இயங்கி வரும் திருத்தலமாகும். இங்கு தினசரி கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது சிவன்மலை கோவிலில் பக்தர்களுக்கு கழிப்பறை சீரமைத்து தரும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News