கோயில் விழாவில் தகராறு - தந்தை, மகன் கைது

ஓட்டப்பிடாரம் அருகே கோயில் கொடை விழாவில் அரிவாளுடன் புகுந்து தகராறில் ஈடுபட்டதாக தந்தை, மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-05-10 04:03 GMT
கோயில் விழாவில் தகராறு - தந்தை, மகன் கைது

பைல் படம் 

  • whatsapp icon
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகர நல்லூா் அருள்மிகு காளியம்மன் கோயில் கொடை விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இவ்விழாவுக்கு, அதே பகுதியைச் சோ்ந்த முருகன், அவரது மகன் மாயகிருஷ்ணன் ஆகியோா் கையில் அரிவாளுடன் வந்து பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனராம். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஓட்டப்பிடாரம் போலீசார், தந்தை- மகன் இருவரையும் கைது செய்தனர். மேலும், அவா்களிடமிருந்து 2 அரிவாள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News