போக்சோ சட்டத்தில் கூலித் தொழிலாளி கைது
உளுந்துார்பேட்டை அருகே சிறுமியை கடத்திச் சென்ற வழக்கில் கூலித் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.;
Update: 2024-05-01 06:38 GMT
போக்சோ சட்டத்தில் கூலித் தொழிலாளி கைது
உளுந்துார்பேட்டை அடுத்த ஒடப்பன்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அரிகிருஷ்ணன், 38; கூலித் தொழிலாளி. திருமணமான இவர், கடந்த 9ம் தேதி 17 வயது சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்த நிலையில் நேற்று இருவரையும் மீட்டனர். தொடர்ந்து 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அரிகிருஷ்ணனை கைது செய்தனர்.