தொழிலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் மிரட்டிய இருவர் கைது

திருநெல்வேலி மாவட்டம்,அனவரதநல்லூர் அருகே தொழிலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் மிரட்டிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-28 06:48 GMT

கைது

நெல்லை மாவட்டம், சிவந்திபட்டி அருகே உள்ள அனவரதநல்லூரை சேர்ந்த முத்துசாமிக்கும் சுடலைகண்ணு இடையே கார் வாங்கி விற்பனை செய்வது சம்மந்தமாக பிரச்சினை இருந்துள்ளது.

இதனை மனதில் வைத்து கொண்டு நேற்று முத்துசாமியை சுடலைகண்ணு,செல்வம் ஆகிய இருவரும் சேர்ந்து அவதூறாக பேசி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து முத்துசாமி அளித்த புகாரின் அடிப்படையில் சிவந்திபட்டி போலீசார் சுடலை கண்ணு, செல்வம் ஆகிய இருவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News