மதுபோதையில் பாணி பூரி வியாபாரியை தாக்கிய மூவர் கைது
பணம் கேட்ட பாணி பூரி வியாபாரியை தாக்கிய மூவர் கைது. இதனை அடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் ஜாமீனில் மூவரையும் விடுவித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-08 06:03 GMT
மதுபோதையில் பாணி பூரி வியாபாரியை தாக்கிய மூவர் கைது
கோவை:குஜராத் மாநிலத்தை சேர்ந்த சச்சின்குமார்(21). குனியமுத்தூர் காமராஜ் நகர் பகுதியில் தங்கி உள்ள இவர் அபர்ணா பேருந்து நிலையம் அருகே சாலை ஓரத்தில் தள்ளு வண்டி மூலம் பாணி பூரி வியாபரம் செய்து வருகிறார்.சம்பவத்தன்று மதுபோதையில் வந்து மூன்று இளைஞர்கள் பாணி பூரி சாப்பிட்ட பின்னர் பணம் தராமல் செல்ல முயன்றதால் சச்சின்குமார் பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த இளைஞர்கள் தாக்கியவாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கி உள்ளனர்.இதுகுறித்து சச்சின் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் பிரபல தனியார் உணவு விடுதியில் பணியாற்றி வரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி சரண்(26),பாலமுருகன்(26) மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார்(22) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் ஜாமீனில் மூவரையும் விடுவித்தனர்.