மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவர் கைது
ஏமனூர் பகுதியில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த நபர் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-18 04:30 GMT
ஏமனூர் பகுதியில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த நபர் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ஒகேனக்கல் காவல்துறையினருக்கு ரகசியம் தகவல் கிடைத்தது அதன்படி, ஒகேனக்கல் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்., சேகர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நேற்று மாலை அந்த வழியாக சென்றபோது நெருப்பூர் அடுத்த ஏமனூர் பகுதியை சேர்ந்த அப்பாதுரை, வயது 39, மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை அடுத்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து அப்பாதுரையை கைது செய்தனர்.