போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்றவரை கைது செய்த விமான நிலைய போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-25 01:50 GMT
திருச்சி விமான நிலையம் 
திருச்சி விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மலேசியா செல்லவிருந்த பயணிகளின் ஆவணங்களை குடியேற்றப்பிரிவு போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்த முத்தலிப் (48) என்பவரின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது அவா் சிவகங்கை மாவட்டம் எலங்கன்குடியைச் சோ்ந்த தமீம் அன்சாரி (48) என்பதும், அவா் போலி ஆவணங்கள் மூலம் முத்தலிப் என்ற பெயரில் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களைத் தயாா் செய்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தமீம் அன்சாரியை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
Tags:    

Similar News