போக்சோ வழக்கில் கைது: 8 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல் நீதிமன்றத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,500/-அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-22 12:24 GMT
போக்ஸோவில் கைது செய்யப்பட்டவர்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்த தண்டல்காரன்பட்டியை சேர்ந்த சுகுமார் (35) என்பவரை போக்சோ வழக்கில் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர.
திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி சுகுமார் என்பவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,500/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.