கொலை வழக்கில் கைதான தம்பதி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை வழக்கில் கைதான தம்பதி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவு.

Update: 2024-03-14 01:46 GMT

குண்டர் சட்டம்

திருச்சி மாவட்டம் ஆலத்துடையான்பட்டியை சேர்ந்தவர் தியாகு. இவர் கடந்த ஜனவரி மாதம் சூரமங்கலம் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 27), இவருடைய மனைவி வரலட்சுமி (26) மற்றும் சுரேஷ் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீசார் விசாரணையில் அவர்கள் முன்விரோதம் காரணமாக தியாகுவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாலகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோர் சேலம் மத்திய சிறையிலும், வரலட்சுமி கோவை பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி துணை கமிஷனர் பிருந்தா போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்து பாலகிருஷ்ணன், வரலட்சுமி, சுரேஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று உத்தரவிட்டார். இதற்கான ஆணை சிறைகளில் அவர்களிடம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News