பிரதமர் வருகை - விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள்
பிரதமர் மோடி வருகையையொட்டி பயணிகள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படாததால் நீண்ட நேரம் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளானார்கள்.;
Update: 2024-01-21 05:13 GMT
பயணிகள் காத்திருப்பு
பிரதமர் நரேந்திர மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு தனி விமான மூலம் வந்தடைந்தார். இதையொட்டி காலை முதலே திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் உள்ளே செல்ல முடியாமல் நீண்ட நேரம் தவித்தனர்.இந்த நிலையில் பிரதமர் விமானம் வருகையால் விமானங்களும் தாமதமாக திருச்சி வந்தடைந்தது. இதனால் பயணிகளும், பயணிகளை அழைக்க வந்தவர்களும் நீண்ட நேரம் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகினர்.