இராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா
Update: 2024-09-06 09:46 GMT
கலைத் திருவிழா
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று கலைத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதற்கு நடுவர்களாக எஸ்.எம்.சி தலைவர் கார்த்திகா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர் திருமதி கு.பாரதி அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.