விழுப்புரத்தில் கைவினையர் முன்னேற்ற கட்சியின் கருத்தரங்கம்

விழுப்புரத்தில் கைவினையர் முன்னேற்ற கட்சியின் சார்பில் கருமார் - தச்சர் - கண்ணார் - சிற்பி -பொற்கொல்லர் ஆகியோரின் வாழ்வுரிமை கருத்தரங்கம் விழுப்புரம் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-17 11:49 GMT

கருத்தரங்கம்

விழுப்புரத்தில் கைவினையர் முன்னேற்ற கட்சியின் சார்பில் கருமார் - தச்சர் - கண்ணார் - சிற்பி -பொற்கொல்லர் ஆகியோரின் வாழ்வுரிமை கருத்தரங்கம் விழுப்புரம் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட செயலாளர் பிரபா சரவணன் வரவேற்புரை நிகழ்த்தினார், மாநில பொருளாளர் செந்தில்குமார், மாநில இளைஞரணிணி செயலாளர் ஆச்சார்யா, மாநில துணைச் செயலாளர் வெங்கடேசன்,விஸ்வகர்மா ஆபரண தொழிலாளர் சங்கம் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் துவக்க உரை மாநில அமைப்பாளர் உமாபதி நிகழ்த்தினார். தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் கலந்துகொண்டு கவன ஈர்ப்பு உரை நிகழ்த்தினார். விழாவில் கோவிட் காலத்தில் கைவினைக் கலைஞர்களுக்கு வாழ்வாதார வளர்ச்சிக்கு உதவிய விழுப்புரம் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ் அவர்களுக்கு விருது,செங்கோல் வழங்கி கௌரவித்தனர். உடன் மாநில தச்சர் தலைவர் அப்பர், லட்சுமணன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:    

Similar News