சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம்
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது;
Update: 2023-12-27 08:48 GMT
நடராஜர் ஆருத்ரா தரிசனம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் திருவெம்பாவை திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்ச்சையாக நடைபெற்றது இந்த விழாவின் சிகர நிகழ்வான ஆருத்ரா தரிசனம் இன்று காலையில் நடைபெற்றது, முன்னதாக கோபூஜை நடைபெற்றது பின்னர் ஸ்ரீ நடராஜ பெருமான் ஆனந்த திருத்தாண்டவ நடனமாடினார் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.