அருள்மிகு பிரசன்னா நஞ்சுண்டேஸ்வரர் முத்து ரதம் திருவீதி உலா

சேலம் மாவட்டம் எடப்பாடி அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் அருள்மிகு தேவகிரி அம்மன் திருக்கோவில்  முத்து ரத திருவீதி உலா நடந்தது.

Update: 2024-04-23 03:45 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் அருள்மிகு தேவகிரி அம்மன் திருக்கோவில்  முத்து ரத திருவீதி உலா நடந்தது.


எடப்பாடி அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் அருள்மிகு தேவகிரி அம்மன் திருக்கோவில்  முத்து ரத திருவீதி உலா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். சித்திரைத் தேர்த்திருவிழா  கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அருள்மிகு தேவகிரி அம்பாள் உடனமர் அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம், இன்று காலை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று இரவு 10 மணி அளவில் மின் ஒளியால் அலங்கரிக்கப்பட்ட முத்து ரதத்தில் அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் அருள்மிகு தேவகிரி அம்மனை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலை சுற்றி உள்ள கடைவீதி முக்கிய வீதி வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News